Wednesday, June 15, 2011

திரும்பி வ்ந்துட்டேன்

ஹ்லோ என் இனிய தமிழ் மக்களே!

உங்களுக்காக வேலுபாரதி பல வேலைகளுக்கிடையே ( உண்மையான காரணம் :சீசன் டல்) மீண்டும் நமது பிளாக் வழியாக வந்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ( யாராவது வரவேற்பு கொடுங்கப்பா!)

Friday, May 30, 2008

பெண்மை திண்ணும் பேய்கள்


பெண்மை திண்ணும் பேய்கள்



உனக்கு பிடித்த நிறத்தில்

எனக்கான புடவை உடுத்தி


நீ விரும்பும் சுவையில்

உணவு சமைத்து


நீ குளிக்கும் சோப்பில்

என் உடல் கழுவி


குடும்பமெனும் குலவிளக்காய்

குழந்தை பெற்றெடுத்து


கூப்பிட்ட போதெல்லாம்

கொஞ்சி குலாவி


சுயம் தொலைத்து

சுருண்டு கிடக்கும்-எனக்கு


அடுத்த பிறவியிலாவது

உன் ஆண்மை தின்ன

அனுமதிப்பாயா என் கணவா ?

Monday, May 26, 2008

வாழ்க மக்களாட்சி!!!!!!

இலவசமெனும் எலும்பு காட்டி
இச்சை தீர்த்தனர் பதவி வெறியர்கள்

இளிச்சவாயர்கள் இட்ட வாக்கில்
இனிதே ஆரம்பபானது இருண்டகாலம்

மளிகை,மண்ணெண்ணெய் விலையுர்வு
மலிவு விலை மதுவில் மறந்து போனது

கழிவுநீர் கடலும், அழுக்கு சுமக்கும் ஆறும்- இலவச
கலர் டி.வி. கவர்ச்சியில் காணாமல் போனது.

இருக்கும் விவசாயிக்கே தண்ணிரில்லை-இலவச
நிலத்தில் என்ன விதைப்பது?


கட்டுமான பொருளின் விலையை கட்டுபடுத்த முடியவில்லை
கேபிள் டி.வி.யை கட்டுபடுத்த ஏனோ அவசரம்?

பிழைப்புக்கு கடல் தாண்டும் மீனவர்களை காக்க முடியாதவர்களுக்கு
பிடுங்குவதற்கா கப்பல்துறை?

இறங்கி உதவ துப்பில்லை-இலங்கை தமிழர்களுக்கு
இரங்கல் கவிதை யாருக்கு வேண்டும்?

மாமன்,மருமகன் பிரச்சினையில்
மக்களை நிணைக்க நேரமேது?

கூட்டணி தர்மம் என்ற பெயரில்
கூட்டு களவாணிக்கு துணை போகும் கட்சிகளும்
சினிமாலும்,சீரியலிலும்
சிந்தை மறந்த நாமும் இருக்கும் வரை
நன்றாகவே நடக்கும் மக்களாட்சி

Friday, May 23, 2008

தமிழனாய் தமிழனுக்கு

டமில் அல்ல தமிழ்
தாயறிந்தோம்
தந்தை முகம் அறிந்தோம்
தாய்த்தமிழை ஏன் மற்ந்தோம்?
நாகரீகமெனும் போர்வை போர்த்தி
நஞ்சு கலந்த பாலை பருகுவதுண்டோ?
அமுதமாய் அன்ணை மொழியிருக்க
அதில் ஆங்கிலம் கலப்ப்து தவறன்றோ?
நாகரீக நஞ்சு விலக்கி
தனிதமிழை காத்திடுவோம் வாரீர்!

தமிழ் மணத்திற்காக ஒரு தகவல்

தமிழ் மணத்திற்காக ஒரு தகவல்

நன்பர் இளையகவியின் ஆலோசனைப்படி என்னை பற்றி சிறுகுறிப்பை சிந்தியிருக்கிறேன்.(தடங்கலுக்கு அன்பர்கள் மன்னிக்கவும்)

இயற்பெயர்:இராமன்

இயற்றுவதற்காக வைத்தது:வேலுபாரதி

வயது: அவசியம் வேண்டுமா?(காதை கொடுங்கள் 26)

தொழில்:வேலையை தேடுவதே வேலையாக கொண்டிருக்கிறேன்.

பொழுதுபோக்கு: சமூக அக்கறையில் கிறுக்குவது.

லட்சியம்:இப்போதைக்கு தமிழ் மணத்தில் இடம் பிடிப்பது. (பின்னால் மக்கள் மனதில்)

இது போதுமென நினைக்கிறேன்.

பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்ததற்கு நன்றிங்கோ!!!!!